சென்னையின் முக்கிய இடங்களில் மாறிய காட்சி.. திணறும் வாகன ஓட்டிகள்
தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. தீபாவளியையொட்டி அரசு கட்டுப்பாடு விதித்தாலும், காலை முதல் தொடர்ந்து பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதால், நகர் பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தது. குறிப்பாக, தாம்பரம் முதல் மதுரவாயல் வரை சாலையே தெரியாதபடி புகைமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்தனர்.