ரூ.498-க்கு ஆர்டர்.. மன உளைச்சலான கஸ்டமர்.. ரூ.15 ஆயிரம் திருப்பி தரும் `சொமாட்டோ'
திருவள்ளூர் அருகே ஆனந்த் சேகர் என்பவர் செல்போன் செயலியில் ஆர்டர் செய்த தோசை, ஊத்தப்பம் வழங்காததால் உணவு டெலிவரி நிறுவனத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டது. வாடிக்கையாளரிடமிருந்து சேவை கட்டணமாக 73 ரூபாய் வசூலித்த சொமாட்டோ நிறுவனத்திற்கு உணவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை சரி பார்க்கும் பொறுப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உணவுக்காக செலவழிக்கப்பட்ட 498 ரூபாய், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்காக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டது.