பெரியார் போட்டோவை வைத்து நபர் செய்த காரியம்.. ராம்நாட்டில் பரபரப்பு

Update: 2024-01-12 03:53 GMT

ராமநாதபுரத்தில் பெரியார் புகைப்படத்தில் காலணியை இணைத்து வைத்து, பெரியார் நினைவுத்தூண் அருகே நின்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் இருந்து புகைப்படத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியனர். விசாரணையில், அந்த நபர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரன் என்பது தெரிய வந்த‌து. மேலும், பெரியாரின் கொள்கைகள் பிடிக்காது என்பதால் இதுபொன்று செய்த‌தாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்