வினையான சிறுவர்கள் விளையாட்டு.. ஸ்கூல் முன் மோதிக்கொண்ட இருதரப்பினர் - அதிர்ச்சி காட்சிகள்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு பள்ளி வாயிலில் இருதரப்பு மோதல் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. தாதாபுரம் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர், பள்ளி சுற்றுச்சுவர் அருகே சக மாணவர்கள் மீது கல்லை வீசியபோது, அந்த வழியாக சென்ற கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது கல் பட்டு காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கிருஷ்ணமூர்த்தி, அந்த மாணவரை தாக்கியதாக புகார் எழுந்தது. இதனால் கோபமடைந்த மாணவனின் தரப்பும், கிருஷ்ணமூர்த்தி தரப்பினரும் பள்ளி முன்புகுவிந்து மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.