இறங்கி வராத விசிக.. தாண்டாத திமுக - கூட்டணிக்குள் பரபரப்பு

Update: 2024-03-02 02:27 GMT

திமுக - விடுதலை சிறுத்தைகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, இன்று நடைபெறவுள்ளது. 3 தனி தொகுதிகள், ஒரு பொது தொகுதி என 4 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கேட்டு வரும் நிலையில், அக்கட்சிக்கு 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமூக உடன்பாடு எட்டப்பட்டு, இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், மனிதநேய மக்கள் கட்சியும் இன்று, திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அக்கட்சி ஒரு தொகுதி கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்