சென்னை தாழ்தள பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிரடி உத்தரவு | TN bus

Update: 2024-09-30 14:32 GMT

ஒரு லிட்டர் டீசலில் 5 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் என்று தாழ்தளப் பேருந்து ஓட்டுநர்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை மாநகரில் 124 தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநகரில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் ஒரு லிட்டர் டீசலில் 4.5 முதல் 7 கி.மீ தூரம் வரையில் பயணிக்கும் வேளையில், தாழ்தளப் பேருந்துகள் 3 கி.மீ தூரமே பயணிப்பதாக அதிகாரிகள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிக எடை, அதிர்வை தடுக்க பின்பக்கம் கிடைமட்டமாக எஞ்சின் உள்ளிட்ட காரணங்களால் மைலேஜ் குறைவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதிக வளைவுகளற்ற முக்கிய சாலைகளிலேயே தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படுவதாலும், நாள்தோறும் முறையாக பராமரிக்கப்படுவதாலும் பொறுப்புடன் ஓட்டினால் 5 கி.மீ நிச்சயம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் காரணமாக தாழ்தளப் பேருந்து ஓட்டுநர்கள் ஒரு லிட்டர் டீசலில் 5 கி.மீ தூரம் பேருந்தை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது 

Tags:    

மேலும் செய்திகள்