பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் புவனேஸ்வரன் என்பவர் காணாமல் போன வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் வரிச்சியூர் செல்வம் மீது பதியப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் களைக்கப்படும் என போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.