"மாமன்னன் படத்திலேயே எனக்கு தெரியும்..." - துணை முதல்வர் உதயநிதி பற்றி பகிர்ந்த வடிவேலு

Update: 2024-10-01 11:09 GMT

விருதுநகர் அரசு மருத்துவக் கலைக் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நடிகர் வடிவேலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கியிருந்த அறைக்கு நேரில் சென்று,பூங்கொத்து கொடுத்து தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். உதயநிதி ஸ்டாலின் கடுமையாக உழைப்பதாகவும், அவருக்கு சரியான நேரத்தில் துணை முதலமைச்சர் பதவி தரப்பட்டுள்ளதாகவும், நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்