இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-09-2023)

Update: 2023-09-20 18:02 GMT
  • மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது..............மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவு.........
  • மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி குற்றச்சாட்டு............90 மத்திய அரசு செயலாளர்களில் 3 பேர் மட்டும் ஒபிசி என்று குறிப்பிட்டு விமர்சனம்.........
  • நாடாளுமன்றத்தில் 85 எம்.பி.க்கள் ஓபிசி பிரிவினர் என மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்.........29 மத்திய அமைச்சர்கள் ஓபிசி பிரிவை சார்ந்தவர்கள் என்றும் தகவல்...........
  • தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் இல்லாமல் இப்போதே மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குமாறு ராகுல்காந்தி பேச்சு.............எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளுங்கள் என்றும் ஆவேசம்............
  • மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்...........மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தகவல்............
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வலிமை வாய்ந்த தலைவர்தான் என்பதை ஒத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை.........மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின்போது திமுக எம்.பி கனிமொழி கருத்து..........
Tags:    

மேலும் செய்திகள்