10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு! | TNGovt | IAS

Update: 2024-10-02 16:04 GMT

உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலராக இருந்த பிரதீப் யாதவ், துணை முதல்வரின் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கால்நடைத் துறை கூடுதல் தலைமைச் செயலராக இருந்த கே.கோபால், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின்பகிர்மான கழகத்தின் இயக்குநராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக இருந்த இ.சுந்தரவல்லி, கல்லூரி கல்வி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுத் துறை இணைச் செயலராக இருந்த விஷ்ணு சந்திரன், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

சமூக நலத்துறை இயக்குநராக இருந்த வி.அமுதவல்லி, கைத்தறி மற்றும் ஜவுளித் துறை செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை தனிச் செயலராக இருந்த ஆர்.லில்லி, சமூக நலத்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகர ஆணையராக இருந்த பவன்குமார் ஜி.கிரியப்பனவர், பொதுத் துறை இணைச் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மனிதவள மேம்பாட்டுத் துறை செயலராக இருக்கும் கே.நந்தகுமாருக்கு கூடுதலாக தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருக்கும் சத்யப்பிரத சாஹுவிற்கு கால்நடைத் துறை கூடுதல் செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்