தமிழக மக்கள் கவனத்திற்கு... நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கட்டணம்...

Update: 2024-06-03 04:25 GMT

தமிழகத்தில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய சுங்கக் கட்டணம், உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு தற்போது சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வானது அமலுக்கு வந்துள்ளது.பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 70 ரூபாயும், ஒரே நாளில் சென்று திரும்ப ரூபாய்110ம், மாதாந்திர கட்டணமாக 2,395 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூபாய்115ம், ஒரே நாளில் சென்று திரும்ப 175 ரூபாயும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 245 ரூபாயும், ஒரேநாளில் சென்று திரும்ப ரூபாய் 365ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 265 ரூபாயும், ஒரே நாளில் சென்று திரும்ப ரூபாய் 400ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.4 சக்கர மற்றும் 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூபாய் 380ம், ஒரே நாளில் சென்று திரும்ப 570 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதேபோல் கடும் கனரக கட்டுமான வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 465 ரூபாயும், ஒரே நாளில் சென்று திரும்ப ரூபாய் 695ம் வசூலிக்கப்படுகிறது.உள்ளூர் கார்களை பொறுத்தவரை, ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் 340 ரூபாய் என உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்