பல உயிர்களை காவு வாங்கிய ஹைவே.. நடுங்கும் திருப்பூர் மக்கள்.. ஜாக்கிரதை

Update: 2024-10-09 14:30 GMT

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதையால் விபத்துகள் அதிகரித்து உயிர்சேதம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மடத்துக்குளத்தில் சாலைப் பணிகள் முடிவுறாத நிலையில், ஒரு வழிப்பாதையில் சென்ற இரு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன், போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி, வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் வட்டாட்சியர் பானுமதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதனிடையே, ஒரு வழிப்பாதையால் தான் இது போன்ற விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரிப்பதாக குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், சாலை பணி முடியும் வரை பாதையை அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்