திருப்பதி மலையில் உள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரை இன்னும் 120 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. திருப்பதி மலையில் உள்ள ஐந்து அணைகளின் நீர் கொள்ளளவு 14 லட்சம் கேலன் ஆக இருக்கும் நிலையில் தற்போது அவற்றில் 5 ஆயிரத்து 800 லட்சம் கேலன் தண்ணீர் மட்டும் உள்ளது. திருப்பதி மலையில் தினசரி பயன்பாட்டிற்கு 43 லட்சம் கேலன் தண்ணீர் தேவைபடுகிறது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் நான்கு முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து, தண்ணீர் பயன்பாடும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. எனவே பக்தர்கள், பொதுமக்கள், ஹோட்டல் நிர்வாகிகள் ஆகியோர் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தேவஸ்தான நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.