நெல்லையின் அடுத்த மேயர் யார்?.. அடிபடும் 2 பெயர்கள்

Update: 2024-07-04 15:44 GMT

சொந்த கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்புக்கு மத்தியில் மேயர் பதவியை சரவணன் ராஜினாமா செய்துவிட்டார். இதனையடுத்து நெல்லையின் புதிய மேயராகப்போவது யார்...? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து மேயர் தேர்வில் திமுக அதிகவனம் செலுத்தும், அனுபவம் வாய்ந்தவரை கொண்டுவரும் என சொல்லப்படுகிறது. இப்போது 25 வது வார்டு உறுப்பினராக இருக்கும் ராமகிருஷ்ணன் பெயரும், 27 வது வார்டு உறுப்பினர் உலகநாதன் பெயரும் மேயர் பதவிக்கு அடிபட்டு வருகிறது. 1980 முதல் திமுகவில் இருக்கும் ராமகிருஷ்ணன் தொடர்ந்து 5 முறை வட்ட செயலாளராகவும், 10 ஆண்டுகள் மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். தொடர்ந்து 3-வது முறையாக மாமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். உலகநாதன் 27 ஆண்டுகளாக கட்சியின் வட்ட செயலாளர் பொறுப்பிலும், 8 ஆண்டுகள் பகுதி செயலாளர் ஆகவும், எட்டு ஆண்டுகள் மாநகர துணை செயலாளராகவும் இருந்துள்ளார். 8 ஆம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் சரவணன் ராஜினாமா ஏற்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி நிர்வாக துறைக்கு அனுப்பப்பட இருக்கிறது. இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையம் மேயர் தேர்தலை அறிவிக்கும்....

Tags:    

மேலும் செய்திகள்