கீழடியில் குழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மை
சிற்பங்கள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை மத ரீதியாக
ஒப்பீட்டு பேசுவது சரியல்ல என அமர்நாத் ராமகிருஷ்னா
கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்லியல்
ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி அகழாய்வை
இன்னும் அதிகப்படுத்தினால் ஏராளமான வரலாற்று
சான்றுகள் கிடைக்கும் என்றார். கீழடி முதல் இரண்டு
கட்ட ஆய்வறிக்கையை வெளியிடுவது குறித்து மத்திய
தொல்லியல்த்துறை இயக்குனரகம் தான் முடிவெடுக்க
வேண்டும் என்றார். கீழடி மூன்றாம் கட்ட அகழாய்வில்
கிடைத்த அகழாய்வு பொருட்கள் சென்னையில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதுவரை
தமிழகத்தில் புதைப்பிடங்களை மட்டும் அதிகளவிற்கு
தோண்டி உள்ளதாக தெரிவித்தார். வாழ்விடப் பகுதிகளை
தேர்வு செய்து, அதனுடைய புதைவிட பகுதியையும் ஒரே
சமயத்தில் தோண்டும் போது மிகச் சரியான வரலாற்றை
கட்டமைக்க முடியும் என்றார். கீழடி அகழாய்வில் முருகன்,
சிவன் போன்ற உருவ சிலைகள் கிடைக்கவில்லை என்றும்
குழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மை சிற்பங்கள்
கிடைத்துள்ளதாகவும், அவற்றை மத ரீதியாக ஒப்பிட்டுப்
பேசுவது சரியல்ல என்றார்.