திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட தங்கும் விடுதியில் முன்பதிவு தொடங்கியது. அரசு சார்பில் கட்டப்பட்ட இந்த விடுதியில் 100 அறைகள் உள்ளது. இந்த விடுதியில் இரண்டு படுக்கைகள் கொண்ட ஒரு அறைக்கு வார நாட்களில் ஆயிரத்து எண்ணூறு ரூபாயும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரண்டாயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மேலும், விடுதியில் தங்கும் பக்தர்களுக்கு சோப்பு, சீப்பு, டூத் பேஸ்ட், ஷாம்பு, தேங்காய் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.