நேரடியாக களத்தில் இறங்கிய நீதிபதி.. பரபரப்பான திருச்செந்தூர் மார்கெட்

Update: 2024-09-06 02:51 GMT

நீதிமன்ற உத்தரவின்படி, திருச்செந்தூர் தினசரி சந்தையில் நீதிபதி கலையரசி ரீனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்செந்தூர் பேருந்து நிலையம் பகுதியில் இயங்கி வந்த 300 கடைகளுக்கு நகராட்சி சார்பில் வேறு இடத்தில் 153 கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, ஏற்கெனவே கடை நடத்தியவருக்கு கடை ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, தனலட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தார். வழக்கு தொடர்பாக, திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் கலையரசி ரீனா, திருச்செந்தூர் தினசரி சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஒவ்வொரு கடையாக சென்று, கடையின் அளவு உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்