`என்கவுன்ட்டர் செய்ய திட்டம்' தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸை பரபரக்க வைத்த இளைஞர்...

Update: 2024-10-12 07:56 GMT

ஒடிசாவில் கைது செய்யப்பட்டிருக்கும் தனது சகோதரரை, போலீசார் என்கவுன்ட்டர் செய்ய இருப்பதாகக் கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் பரபரப்பு புகாரளித்திருக்கிறார்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டுடன் காடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உள்ள நிலையில், ஒடிசாவின் மூசிறப்பள்ளி ரயில் நிலையத்தில் வைத்து தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தூத்துக்குடியில் ஏற்கனவே இரண்டுக்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்களை செய்துள்ள உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் லட்சுமணனை பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்ததாக கூறி ஒடிசா காவலர்களிடம் இருந்து போலீசார் சான்றிதழ் வாங்கியிருப்பதாகவும், இதனால் லட்சுமணனை போலீசார் என்கவுன்ட்டர் செய்ய இருப்பதாகவும் கூறிய அவரின் சகோதரர், உடனடியாக லட்சுமணனை காப்பாற்றுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் புகாரளித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்