கிரிக்கெட் ஆட சென்ற இளைஞர்கள்கை, கால் நடுங்க நேரில் கண்ட கொடுமை..விஷயம் தெரிந்து ஊரே கதறிய சோகம்

Update: 2024-09-18 08:12 GMT

கிரிக்கெட் ஆட சென்ற இளைஞர்கள்

கை, கால் நடுங்க நேரில் கண்ட கொடுமை

விஷயம் தெரிந்து ஊரே கதறிய சோகம்

துள்ளி விளையாடிய குழைந்தைகள்

இரக்கமே இல்லாமல் உயிர் குடித்த எமன்

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஏரியில் குளிக்கச் சென்ற 4 குழந்தைகள், நீர் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த துயரச் சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஓடந்தாங்கல் கிராமத்தில்தான் இந்த கோரம்...கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற இளைஞர்கள், ஏரியில் கண்ட காட்சியை ஊரில் தெரிவித்ததில்தான் இந்த ஓலச் சத்தம்..அருகிலுள்ள அடையபலம் கிராமத்தை சேர்ந்த தம்பதி குப்பன்-அஞ்சலி...

இவரின் மகனான 12 வயது குழந்தை மோகன், தன் தங்கையான 8 வயது குழந்தையான வர்ஷாவுடன் அருகிலுள்ள ஓடைத்தாங்கல் ஏரியில் குளிக்கச் சென்றிருக்கிறார்...

இவர்களுடன் அதே கிராமத்தை சேர்ந்த விநாயகம் - செல்வி தம்பதியரின் 10 வயது மகள் கார்த்திகா மற்றும் 5 வயது குழந்தை தன்ஷிகாவும் குளிக்கச் சென்ற நிலையில், இந்த விபரீதம் அரங்கேறி இருக்கிறது. நால்வரும் ஏரியில் விளையாட்டுத்தனமாய், விபரீதம் அறியாமல் குளித்துக்கொண்டிருந்த நிலையில், நீர் சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். ஏரிக்கரையில் கிரிக்கெட் விளையாட வந்த இளைஞர்கள்.. கரை ஓரத்தில் ஆடைகள் மட்டும் இருக்கிறதே, ஆள்களை காணவில்லையே என பார்த்தபோதுதான் இந்த கோரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நால்வரின் சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இளம் பிஞ்சுகளின் உடல்களை சடலமாக கண்டு பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்தான விசாரணையே போலீசார் முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்