பஸ் ஸ்டாண்டில் 50 மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனை அடித்த சம்பவம் - திருப்பூரில் பரபரப்பு
திருப்பூரில் ஒரு மாணவனை ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பலர் கட்டை, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவற்றால் அரிசி கடை வீதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவன சரமாரியாக தாக்கினர். பின்னர் மாணவர்கள் சிதறி ஓடியதால் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் தனது மகன் தாக்கப்ப்பட்டதை கண்டு அம்மணவனின் தந்தை பேருந்து நிலையத்தின் படுத்து மறியலில் ஈடுபட்டார் அவரை போலீசார் சமாதானம் செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். மாணவன் தாக்கப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.