ஊர்ப்பக்கம் ஒதுங்கிய ஒற்றை காட்டு யானை... விரட்டும் பணியில் ஸ்தம்பித்து போன வனத்துறை

Update: 2024-07-14 17:29 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை பகுதியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் காட்டு யானை முகாமிட்டு உள்ளது. தகவலறிந்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வேலூர் எம்.பி., கதிர் ஆனந்த், ஆம்பூர் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணி குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ஓசூரில் இருந்து சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு, யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்பும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்