2 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீ.. "காரணமாக இருந்த விவசாயிகள்.." வெளியான பின்னணி

Update: 2024-03-23 06:21 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள முருகமலை வனப்பகுதியில், பாம்பார் காப்புக்காடு, தொண்டகத்தி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீ. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் மற்றும் மலை கிராம இளைஞர்கள் 2 நாட்களாக போராடி காட்டுத் தீயை அணைத்தனர். இந்நிலையில் தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் தீ பற்றியதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், பெரியகுளம் அருகே உள்ள எ.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, முத்துச்சாமி ஆகிய இருவரும் தொண்டகத்தி பகுதியில் விவசாய கழிவுகளுக்கு தீ வைத்த போது அருகே இருந்த வனப்பகுதியில் தீ பற்றியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் விவசாய கழிவு பொருட்களை, தீ வைக்க முற்படும் பொழுது வனத்துறையினருக்கு உரிய தகவல் கொடுத்து வனத்துறை ஊழியர்கள் முன்னிலையில் தீ வைக்க வேண்டுமென தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்