சென்னையில் கொள்ளையடித்த பேக்கை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - உடைந்த கை

Update: 2024-12-24 04:17 GMT

கடந்த வாரம் சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் பட்டப்பகலில் இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர், ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி, லெதர் பேக்கை அறுத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட நபர் ஹரி பிரசாத் என்ற கலெக்சன் ஏஜென்ட் என்பதை கண்டறிந்து போலீசார் விசாரித்தபோது, பயத்தின் காரணமாகவும், லெதர் பேக்கில் பணம் இல்லை என்பதாலும் புகார் அளிக்கவில்லை என்பது தெரிய வந்த‌து. இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாததால், நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மணலியை சேர்ந்த நரேஷ், கண்ணன், மகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட நபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் ஸ்கெட்ச் போட்டு லெதர் பேக்கை பறித்த‌து தெரிய வந்துள்ளது. கலெக்சன் ஏஜன்ட் என்பதால் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என நினைத்த நிலையில், அதில் ஒரு ரூபாய் கூட இல்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். போலீசில் சிக்க‌க் கூடாது என்பதற்காக மாற்று உடைகளை எடுத்துச் சென்று, சிறிது தூரத்தில் உடைகளை மாற்றிக்கொண்டு தலைமறைவானதாகவும் கூறியுள்ளனர். கைது செய்யப்படும்போது, 2 பேர் கீழே விழுந்த‌தில் அவர்களுக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்