"ரூ.200 பணம் கொடுத்து அசிங்க படுத்துவாங்க.. ஒரு ஊருக்கு 100 பேர் போன் பண்ணுவாங்க" - ஊ.ம தலைவர்
கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி ஊராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த மஞ்சுளா என்பவரும் துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த ராசாத்தி என்பவரும் பணியாற்றி வந்தனர். பின்னர் ராசாத்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற ராசாத்தி, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு, ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்தார். தான் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதால் தன்னை தகுதி நீக்கம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செய்தியாளர்களை சந்தித்து, தன் மீதான புகார்களை மறுத்தார்.