பந்தலூர் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் புல்லட் யானையை தடுக்க வனத்துறை நிர்வாகம் புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் பந்தலூர் பகுதியில் சுற்றி திரியும் புல்லட் யானை இதுவரை 35 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. புல்லட் யானை குடியிருப்புக்குள் வருவதை தடுக்க வனத்துறை பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அரிசி மற்றும் பருப்பு போன்ற பொருள்களை உண்பதற்காக மோப்பம் பிடித்து யானை வரும் சூழ்நிலையில், யானைக்கு எரிச்சலூட்டும் வகையில் வேப்பெண்ணையில் மிளகாய் பொடி கலந்து அதில் துணி மூலம் நனைத்து வீடுகள் முன்பாக அதனை கட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானை துணியை நுகரும்போது எரிச்சலூட்டும் வாசனை காரணமாக வீடுகளை உடைப்பது தவிர்க்கப்படும் என வனத்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.