தவறை தட்டிக்கேட்ட நபரை... நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய நெசவாளர்.. ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-10-20 12:31 GMT

கைத்தறி பட்டுக்கு புகழ் பெற்ற ஆரணியில், கடந்த சில மாதங்களாக சிலர் விசைத்தறியில் பட்டுப்புடவையை நெசவு செய்து, கைத்தறி பட்டு என்று கூறி விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள், கைத்தறித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஆரணி அருகே உள்ள சக்தி நகரில், விசைத்தறியில் பட்டுப்புடவை நெய்யப்படும் இடத்தை அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவர் அதிகாரிகளிடம் காண்பித்ததாக தெரிகிறது. இதைக் கண்ட விசைத்தறி நெசவாளர்களான நாகராஜ், அவரது மகன் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து பாபுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாபு, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்