ஆடி பவுர்ணமிக்கு ஆடிப்போன பூக்களின் விலை

Update: 2023-07-31 12:44 GMT

ஆடிப் பெளர்ணமி, ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, மதுரை சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கிலோ மல்லிகைப்பூ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சம்பங்கி 300 ரூபாய்க்கும், செவ்வந்தி 250 ரூபாய்க்கும், அரளி 250 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 150 முதல் 200 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இன்னும் இரு தினங்களில் பூக்களின் விலை மேலும் உயரக்கூடும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்