Breaking:|| ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு உதவ வந்த மருத்துவர்கள் குழுவை முடக்கிய அப்போலோ நிர்வாகம்
Breaking:|| ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு உதவ வந்த மருத்துவர்கள் குழுவை முடக்கிய அப்போலோ நிர்வாகம்
ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு உதவ தமிழக அரசு சார்பில் மூத்த மருத்துவர்கள் கொண்ட ஆறுபேர் குழு அமைக்கப்பட்டது - ஆணையம்
அப்போலோ மருத்துவர்களுக்கு சிகிச்சையின்போது ஆலோசனை வழங்குவதுதான் அரசுமருத்துவர்கள் குழுவின் பங்கு - ஆணையம்
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அரசு மருத்துவர்கள் குழுவும் அங்கேயே தங்கியிருந்தது. - ஆணையம்.
ஆனால் அரசு மருத்துவர்களிடம் அப்போலோ நிர்வாகம் எந்த ஆலோசனையையும் பெறவில்லை, ஜெயலலிதா உடல்நிலை குறித்தும் எதுவும் சொல்லவில்லை - ஆணையம்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், மற்றும் உடல்நிலை குறித்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் ஓடிக்கொண்டிருந்த டி.வி. மூலமே தெரிந்து கொண்டது - ஆணையம்
ஜெயலலிதா மரணமடைந்த செய்தியையும் அரசு மருத்துவக் குழு தொலைக்காட்சி மூலமாகவே தெரிந்து கொண்டது - ஆணையம்.
தமிழக அரசு நியமித்த மருத்துவ குழுவில் பாலாஜி என்ற மருத்துவர் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவருக்கும் சிகிச்சை பற்றிய எந்த தகவலும் சொல்லப்படவில்லை - ஆணையம்