வெள்ளம் வடிந்த 6வது நாள்..தென்னக மக்களுக்காக முதல்வர் போட்ட ட்வீட்.. | CM Stalin | Tamilnadu
பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல் நலனை உறுதிசெய்ய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக, தமது டுவிட்டர் செய்தியில் கூறி இருக்கிறார். உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்கள்,எம்பி. எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் களத்தில் இருந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருவதாக தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளரும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்