சென்னை திருவான்மியூரில் கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனாம்பேட்டையைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி நடராஜனின் மகன் தீபக், கடலில் ஆழமான இடத்தில் சிக்கிய தனது நண்பரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது இருவரும் அலையில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர். நண்பர்களின் கூச்சலை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டனர். அதில் தீபக் உயிரிழந்த நிலையில், அவர் காப்பாற்ற முயன்ற நண்பன் ஆகாஷ் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.