சென்னையில் ஏழு இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அடையாறு காவல் மாவட்டத்தில் மட்டும் ஆறு பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருச்சக்கர வாகனத்தில் வந்த
2 மர்ம நபர்கள், சைதாப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகம் எதிரே பெண்ணிடம் நான்கு சவரன் செயினை பறித்துவிட்டு தப்பிச் செல்வது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.