5 ஆண்டுகளாக நடக்கும் முறைகேடு... ஒரே அடியாக போட்டுடைத்த வார்டு உறுப்பினர்கள்
கோவை மாவட்டம் நாரனாபுரம் ஊராட்சியில் உள்ள 3 கிராமங்களில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தூய்மை பணியாளர் கூட நியமிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிராமங்களில் தூய்மை பணி மேற்கொள்ள வெளியூரிலிருந்து பணியாளர்கள் அழைத்து வரப்படுவதாகவும், அதிலும் அதிகளவு தொகை குறிப்பிடப்பட்டு முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் வளர்ச்சி பணிகளில் அக்கறை காட்டுவதில்லை எனவும் வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.