"இவ்ளோ பெரிய ஹாஸ்பிடல்ல.. அநியாயமா உசுரே போச்சு.. அரசுட்ட துட்டே இல்லையா?" ஆக்ரோஷமாக பேசிய இளைஞர்

Update: 2024-10-27 03:41 GMT

"இவ்ளோ பெரிய ஹாஸ்பிடல்ல.. அநியாயமா உசுரே போச்சு.. அரசுட்ட துட்டே இல்லையா?" ஆக்ரோஷமாக பேசிய இளைஞர்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பலதா என்ற 40 வயது பெண், 3 நாட்களுக்கு முன்பு, மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 25ஆம் தேதி காலை ஸ்கேன் எடுத்து வரும்படி எழுதிக் கொடுத்துள்ளனர். இதனிடையே, புஷ்பலதா திடீரென உயிரிழந்துள்ளார். ஆனால், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருக்கும் ஸ்கேன் சென்டரில் முறையாக ஸ்கேன் செய்யாமல் 2 நாட்கள் வரை அலைக்கழிப்பு செய்து, முறையாக சிகிச்சை அளிக்காத‌தால்தான் உயிரிழந்த‌தாக உறவினர் குற்றம் சாட்டினர். மேலும், ஸ்கேன் சென்டர் முன்பு நின்று, மருத்துவர் வரவில்லை என்று வீடியோவும் எடுத்துள்ளார். அப்போது, காவல்துறையினர், மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் விசாரித்தபோது, உயிரிழந்த புஷ்பலதா திரும்பி வருவாரா? என்று அவரது சகோத‌ர‌ர் கேள்வி எழுப்பி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்