நேற்று வந்த பூமியின் 2வது நிலா மீண்டும் எப்போது வரும்? வெளியான Exciting Update

Update: 2024-09-30 07:43 GMT

பூமிக்கு அருகே நவம்பர் 25-ஆம் தேதி வரை 2 நிலவுகள் வானில் சுற்றும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 'மினி நிலா' என்று அழைக்கப்படும் இந்த சிறு விண்கல்லுக்கு, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் '2024 PT5' என்று பெயரிட்டுள்ளனர். இந்த விண்கல் மிகவும் சிறியது என்பதால் வெறும் கண்ணால் பார்க்க முடியாது என்றும், தொலைநோக்கி மூலமாகவே மட்டும் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் பூமியை முழுவதும் சுற்றாமல், வில் வடிவத்தில் 57 நாட்கள் மட்டும் சுற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25-ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து பிரியும் இந்த விண்கல், மீண்டும் 2055-ஆம் ஆண்டு பூமியை கடந்து செல்லலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்