புதிய உத்திகள் மூலம் இயற்கை விவசாயம்.. கட்டிட பொறியாளரின் சூப்பர் ஐடியா
கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கட்டிட பொறியாளரான இவர், இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து வருகிறார். நடப்பாண்டில் நிழற்பாய் நாற்றங்கால் முறையில் இவர் நடவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த முறையின் மூலம் நாற்றங்கால்கள் விரைவாக வளர்வதாகவும், சேதாரம் இன்றி பிடுங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. விவசாய வேலைக்கு உள்ளூர் ஆட்கள் கிடைக்காததால் மேற்கு வங்க தொழிலாளர்களை கொண்டு நடவு செய்துள்ளார். வழக்கமான விவசாயத்தை விட இயற்கை முறையிலான விவசாயத்திற்கு பாதி செலவே ஆகிறது என்றும் சிவக்குமார் தெரிவிக்கிறார்.