களைகட்டிய தஞ்சை பெரியக்கோவில் தமிழில் தேவாரம் பாடி சித்திரை திருவிழா துவக்கம்
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில், சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் பந்தக்காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழில் தேவாரம், திருமுறைகள் பாடி பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. அன்றிலிருந்து தொடர்ந்து 18 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப்ரல் 18-ந் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், தேரோட்டம் ஏப்ரல் 20-ந் தேதியும் நடைபெறுகிறது.