"சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது" - அமைச்சர் மூர்த்தி வாக்குறுதி

Update: 2024-12-28 00:28 GMT

ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

மதுரையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, காளைகளின் கொம்பில் ரப்பர் குப்பிகள் பொருத்துவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாகவும், ரப்பர் குப்பிகள் வைப்பதற்கு பதிலாக மாற்று வழியை கால்நடைத்துறை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் தமிழக அரசின் சார்பில் எந்த ஒரு பரிசுகளும் வழங்கப்படுவதில்லை என்றும் நன்கொடையாளர்கள் பரிசுகள் வழங்குவதாகக் கூறினார். கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கிலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்