தமிழகமெங்கும் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி... கியூட்டாக வேடமணிந்த குட்டீஸ் | Krishna Jayanthi

Update: 2024-08-27 05:10 GMT

தமிழகமெங்கும் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி... கியூட்டாக வேடமணிந்த குட்டீஸ் | Krishna Jayanthi

கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

1. கூடங்குளம், நெல்லை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அரசமரத்து விநாயகர் கோவிலில், இந்து முன்னணியினர் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. சமய வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டு போட்டியும், கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் ஊர்வலமும் நடைபெற்றது.

2. மோட்டூர், வேலூர்

வேலூர் மாவட்டம் மோட்டூர் பகுதியில் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 50 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறினர்.

3. புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் உள்ள விட்டோபா கோயிலில் நடைபெற்ற சிறப்பு பஜன் நிகழ்ச்சியில், ராதாகிருஷ்ணன் பாடல்கள் பாடப்பட்டன. இதனை தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் ராதா, கிருஷ்ணன் வேடம் அணிந்து அசத்தினர்.

4. இரணியல், கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து, ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்