தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், ஆண்டுதோறும் 1000 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 911 கோடியில் 28 பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னையைச் சுற்றி 6 ஆயிரத்து 778 கோடியில் 2 ஆயிரத்து 641 கிலோமீட்டர் நீள மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில், 669 கிலோமீட்டர் நீள பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆயிரத்து 200 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் 858 கோடியில் 7.4 லட்சம் எல்.இ.டி மின் விளக்குகள் மாற்றும் பணி தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. 771 கோடி மதிப்பில் பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறைகள், 424 கோடி மதிப்பில் பூங்கா விரிவாக்க பணிகள், 198 கோடி செலவில் 100 அறிவுசார் மைய பணிகள் நடைபெறுவதாக கூறியுள்ளது. இது போன்ற நகரமயமாக்கல் பணிகளால் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது...