தேர்தலில் பணம், பரிசு பொருள் கொடுப்பதை தடுக்க App - வெளியான முக்கிய தகவல்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த தகவலில் இதனைத் தெரிவித்த சத்யபிரதா சாகு, தேர்தல் முறைகேடுகள் குறித்தும், வாக்காளர்களுக்கு பரிசு பொருள், பணம் கொடுப்பது பற்றியும், சி-விஜில் செயலி மூலம் செல்போனில் வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என்றும் தெரிவித்தார். புகார் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் - அதை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும் என்றும், ஆன்லைன் மூலமாகவும், தேர்தல் அலுவலகத்துக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.
அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.