தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு கூடுதல் விடுமுறையளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பட்டாசு உற்பத்தியாளர்கள், நவம்பர் 4ம் தேதி வரை பட்டாசு வணிகத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி, மறுநாள் நவம்பர் 1-ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதற்காக, தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள், தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், தற்காலிக பட்டாசு விற்பனை உரிமத்தை 4-ம் தேதி வரை நீ ட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.