பயணிகளுக்கு ஷாக்..! தாம்பரம் ரயில் நிலைய விவகாரம்... வெளியான நெகட்டிவ் பதில்
தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்காக முன்மொழியப்பட்ட டெண்டர் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில் நில மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்துள்ளது.
அதில் தாம்பரம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு விரிவான மாஸ்டர் பிளானிங் திட்டம், இன்னும் ஆலோசனை நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் முனையம் கடந்த நிதியாண்டில் 233 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள நிலையில் அதன் மறுசீரமைப்பு பணிகள் மீது தெற்கு ரயில்வே கவனம் செலுத்தாமல் அலட்சியமாக உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் நடை மேம்பாலம் மற்றும் பிளாட்பார்ம் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.