தாம்பரம் ரயில் நிலையத்தில்... 4 கோடிக்கு 20 கிலோ தங்கம் - விசாரணையில் வெளியான உண்மை

Update: 2024-10-27 01:43 GMT

தாம்பரம் ரயில் நிலையத்தில்... 4 கோடிக்கு 20 கிலோ தங்கம் - விசாரணையில் வெளியான உண்மை | Chennai

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 20 கிலோ தங்கக் கட்டிகள் விற்று பணம் கொடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பணம் ஹவாலா பணம் எனத் தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பாஜக எம்பி செல்வகணபதி, ஹாவலா புரோக்கர் தீபக் மற்றும் சூரஜ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர். இதில் விசாரணைக்கு ஆஜரான சூரஜ் புதுச்சேரி எம்பி தன்னை தொடர்பு கொண்டு 20 கிலோ தங்கக் கட்டிகளை விற்றுத் தருமாறு கேட்டதாகவும், அதன் அடிப்படையில் சென்னையில் 15 கிலோ தங்கத்தையும் 5 கிலோவை புதுச்சேரியில் விற்றுக் கொடுத்ததாகத் தெரிவித்து இருக்கிறார். மேலும் தேர்தல் செலவுகளுக்காகத் தான் தங்கத்தை விற்றுக் கொடுத்ததாகவும் ஹாவலா புரோக்கர் விசாரணையில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்