கோடை விடுமுறை... வேகமாக பறந்த அதிரடி உத்தரவு

Update: 2024-05-31 13:34 GMT

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பள்ளிகள் திறக்கும் போது சத்துணவு மையங்களில் காலாவதியான உணவு பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக எண்ணெய், முட்டை, கொண்டைக்கடலை. பாசிபயறு போன்ற உணவு பொருட்கள் தரமானதாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர்கள் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் பள்ளிகள் துவங்கும் முன்பாகவே சத்துணவு மையங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சத்துணவு மையங்களில் தடையின்றி உரிய நேரத்தில் மதிய உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கிட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்