ஸ்டார்ட்டான சம்மர் .. எகிறிய ஐஸ்கிரீம் விலை | Ice cream | Aavin

Update: 2024-03-03 02:55 GMT

ஆவினில் பால் மட்டுமின்றி ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் கோடை காலத்தை கருத்திற்கொண்டு விற்பனையை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் திட்டம் வகுத்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு கோடை காலத்தை விட 20 சதவீதம் விற்பனையை அதிகரிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இடுபொருள்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை ஆவின் நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. மேலும், இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்