ஆட்டோ ஒட்டுநரின் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்....தற்கொலை தீர்வல்ல

Update: 2024-09-11 07:18 GMT

அவசர தேவை என சொல்லி வாங்கிய கடனே ஒரு குடும்பத் தலைவனின் உயிரை அநியாயமாக பறித்திருக்கிறது. எங்கே நடந்தது இந்த சம்பவம்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

ஆட்டோ ஒட்டுநரின் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்

கடன் மேல் கடன்... அந்த கடனை அடைக்க அடுத்தடுத்து வாங்கிய கடன் கடைசியில் ஒரு குடும்பத்தையே நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது...

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வேலம் பகுதியைச் சேர்ந்த ராஜூ. வாடகைக்கு ஆட்டோ ஒட்டி வருகிறார். மிகக் குறைவான வருமானமே கிடைக்கிறது என்பதால் ராஜூவின் மனைவி இந்திராவும் அருகில் உள்ள ஷூ கம்பெனிக்கு வேலைக்குச் சென்று இருக்கிறார்.

அடிப்படை தேவைகளுக்காக வாங்கிய கடனே சுமையாகி போன துயரம்

தம்பதிகளுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்த ராஜூ தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடமானமாக வைத்து மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை கடன் வாங்கி இருக்கிறார். பின்னர் இந்த கடனுக்கான தவணையைக் கட்டமுடியாமல் அதற்கும் பல தனியார் நிறுவனங்களில் கடன் வாங்கி இருக்கிறார்.

மொத்தமாக வாங்கிய கடன்களின் தவணைகள் ராஜூவின் கழுத்தை நெரித்து இருக்கிறது. அதனைச் சமாளிக்க அவர் எடுத்த முடிவு தான அந்த குடும்பத்தையே நிர்கதியாக்கி இருக்கிறது. 

திருப்பி செலுத்தும் அளவிற்கு நம்மிடம் பண வசதி இருந்தால் மட்டுமே கடன் வாங்க வேண்டும் என்பதும், அப்படி இல்லாவிட்டால் கடன் எனும் மாயச் சுழல் நம்மைச் சார்ந்தவர்களையும் நிர்கதியாக்கிவிடும் என்பதற்குத் தலைவனை இழந்த குடும்பமே சாட்சியாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்