இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் பிரிந்த உயிர்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் சொன்ன தகவல்

Update: 2024-08-03 03:16 GMT

இலங்கை அருகே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 2 பேரும், உயிரிழந்த மீனவரின் உடலும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இரு தினங்களுக்கு முன்பு, நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்களின் படகை பிடிக்க முயன்றபோது, இலங்கை கடற்படை படகு மோதியதில், தமிழக மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது.

அந்த படகில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் கடலில் மூழ்கினர்.

அவர்களில் 3 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் புங்குடுதீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடலில் மூழ்கியே அவர் உயிரிழந்துள்ளதாக உடற்கூறு பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது.

மாயமான மற்றொரு மீனவரை இந்திய, இலங்கை கடற்படை தேடி வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த மீனவரின் உடலும், 2 மீனவர்களும் யாழ்ப்பாண இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இறந்த மீனவரின் உடலை உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்