தொடர் லவ் டார்ச்சர்..! ஏற்க மறுத்த மாணவி... கத்தியோடு வீடு புகுந்த இளைஞன்... - பதற வைக்கும் வீடியோ
காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து தாக்கி, பெற்றோரை கத்தியால் குத்த முயன்ற இளைஞரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் ஷாஜன் என்ற வாலிபர் அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், மாணவி காதலை ஏற்க மறுத்தநிலையில், பெண்ணின் பெற்றோரும் இளைஞரை கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஷாஜன் கத்தியுடன் மாணவியின் வீட்டுக்கு வந்து அவருடைய பெற்றோரை தாக்கியதுடன் அவர்களை கத்தியால் குத்த முயன்றார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜனை வலைவீசி தேடி வருகின்றனர். தற்போது இளைஞர் மாணவியின் பெற்றோரை தாக்கி கத்தியால் குத்த முயன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.