ரூ.6 லட்சத்துக்காக விழுந்த அரிவாள் வெட்டு.. படுத்த படுக்கையான டாஸ்மாக் ஊழியர்.. செக் வைத்த போலீசார்

Update: 2023-07-27 02:54 GMT

குளச்சல் அருகே இரும்பிலி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் குளச்சல் காவல்நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 8 ஆம் தேதி டாஸ்மாக்கை மூடி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, டாஸ்மாக்கில் வசூலான ஆறரை லட்ச ரூபாய் பணத்துடன் சென்ற கோபாலகிருஷ்ணனை திடீரென மறித்த முகமூடி கொள்ளையர் ஒருவர், அவரை அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயன்றிருக்கிறார். இதில், பணப்பையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பணத்தையும், தனது உயிரையும் காப்பாற்றிக் கொண்ட கோபாலகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளைரை தேடி வந்த நிலையில், இரணியல் அருகே நெய்யூர் பகுதியை சேர்ந்த அருண்சஜூ என்பவர் தான் சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள அருண்சஜூயை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்