"சிறையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்".. சவுக்கு வழக்கறிஞர் சொன்ன பரபரப்பு தகவல்

Update: 2024-06-14 01:52 GMT

கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய வழக்கு ஜுன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனுவின் தீர்ப்பை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து,

செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்,

சிறையில் சவுக்கு சங்கர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறினார். இதனை கண்டித்து புழல் சிறையில் சவுக்கு சங்கர் 2 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டதாகவும், கட்டாயப்படுத்தி காவல்துறையினர் உண்ணாவிரதத்தை முடிக்க வைத்ததாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்